கொரோனா பாதிக்கப்பட்ட வடிவேலுவின் நிலை என்ன? – மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவல்

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் வடிவேலுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தகவல்  வெளியிட்டுள்ளது.

நடிகர் வடிவேலு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

`நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் படப்பிடிப்புக்காக பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு, டைரக்டர் சுராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் சில நாட்களுக்கு முன்பு லண்டன் சென்றனர். அங்கு படப்பிடிப்பை முடித்து விட்டு வடிவேல், டைரக்டர் சுராஜ், அவரது உதவியாளர் ஆகியோர் கடந்த 23-ந்தேதி சென்னை திரும்பினர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் வடிவேலு, டைரக்டர் சுராஜ் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வடிவேலுவின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடிகர் வடிவேலு விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total
0
Shares
Related Posts