கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உதவியில் படிக்கும், 1800 மாணவர்களின் கல்விச் செலவை அடுத்தாண்டு முதல் ஏற்க உள்ளதாக தமிழ் திரையுலகின் முண்ணனி நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
கன்னட சூப்பர் ஸ்டார், நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு கன்னட திரை உலகை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கில் மக்கள் ஒன்று திரண்டனர்.
நடிகராக மட்டுமின்றி மேலும் பல்வேறு சமூக நலப் பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட புனித் ராஜ்குமார் அதன் ஒரு பகுதியாக 1800 மாணவர்களின் கல்விச் செலவையும் ஏற்றிருந்தார்.
நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் அவரின் உதவியில் படிக்கும், 1800 மாணவர்களின் கல்விச் செலவை அடுத்தாண்டு முதல் ஏற்க உள்ளதாக தமிழ் திரையுலகின் முண்ணனி நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
விஷால் நடிப்பில் உருவாகி உள்ள எனிமி திரை படம் நவம்பர் 4ம் தேதி தீபாவளி அன்று நேரடியாக திரையரங்குகளில் வேளியாக இருக்கும் நிலையில், அதன் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் முன்னதாக மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு எனிமி படக்குழுவினர் இரங்கல் தெரிவித்து அவரது புகைப்படத்துக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியின் போதே அடுத்தாண்டு முதல் 1800 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்க உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்தார்.