பிரபல தென்னிந்திய நடிகை அமலா பால் திருவண்ணாமலை கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த வீடியோ மற்றும் புகைப்படங்க இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.
தமிழ் , மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகை அமலா பால். நடிப்பதை தாண்டி சில பல படங்களை தயாரிக்கவும் செய்துள்ள அமலா பால் கடந்த சில வருடங்களுக்கு முன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் தற்போது இவருக்கு அழகிய ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.
Also Read : ஈபிஎஸ்-க்கு குழி பறிக்கும் வேலை நடந்து வருகிறது – ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேச்சு..!!
குழந்தை பிறந்ததன் காரணமாக அன்மை காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வரும் நடிகை அமலா பால் தற்போது குடும்பத்துடன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவழித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடிகை அமலா பால், தனது குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது நடிகை அமலா பாலுடன் பொதுமக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் என அனைவரும் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.