பிரபல சின்னத் திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற நெடுந்தொடரில் “முல்லை” என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் தனனெக்கென தனி இடம் பிடித்த சித்ரா, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திடிரென தற்கொலை செய்துகொண்டார்.
Also Read : வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-60..!!
சித்ராவின் தற்கொலைக்கான காரணம் இன்று வரை மர்மமாகவே இருக்கும் நிலையில் தற்போது சித்ராவின் தந்தை காமராஜ், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவான்மியூரில் உள்ள இல்லத்தில் மகள் துப்பட்டாவில் காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் . 64 வயதாகும் காமராஜ் ஓய்வு பெற்ற காவலர் என்பது குறிப்பிடத்தக்கது.