நடிகை கவுதமிக்கு அதிமுகவில் அ.தி.மு.க கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
நடிகை கவுதமி, பாஜகவில் மாநில பொறுப்பில் இருந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பா.ஜ.க.வில் இருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க.வுக்காக பல்வேறு தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், தற்போது அ.தி.மு.க.வில் அவருக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : நடிகர் கிச்சா சுதீப்பின் தாய் மறைவு : 24 மணி நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது!
அவருக்கு அ.தி.மு.க கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, மேலும் சிலருக்கு கட்சியின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தின் துணை செயலாளராக தடா பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
பாத்திமா அலி கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளராகவும், கழக விவசாயப்பிரிவு துணை செயலாளராக சன்னியாசியும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.