பிரபல தமிழ் திரைப்பட நடிகை கமலா காமேஷ் உடல் நலக்குறைவால் காலமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்சாரம் அது மின்சாரம், கடலோரக் கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை ஆகிய படங்களின் மூலம் மக்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் கமலா காமேஷ்.
சுமார் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர், 1974ஆம் ஆண்டு இசையமைப்பாளர் காமேஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உமா ரியாஸ் என்ற மகள் உள்ளார் . அவரும் தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிகையாக உள்ளார்.
இந்நிலையில் நடிகை கமலா காமேஷ் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமாகி உள்ளதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
RJ பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’தான் கமலா காமேஷின் கடைசி படம் ஆகும். தனது 72 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள கமலா காமேஷின் மறைவுக்கு தற்போது பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.