கொச்சியில் ஒரு தனியார் பாரில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, ஐடி ஊழியர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாகவும், அந்த கடத்தல் கும்பலில் நடிகை லட்சுமி மேனனுக்கும் தொடர்ப்பு இருப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், லட்சுமி மேனனிடம் விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

2011ஆம் ஆண்டு வினயன் இயக்கிய ‘ரகுவின் சொந்தம் ராசியா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமி மேனன். அவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போது அந்தப் படத்தில் நடித்தார். அவரது நடிப்பைப் பார்த்து, இயக்குனர் பிரபாகரன், சுந்தரபாண்டியன் (2012) படத்தில் எம். சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு அளித்தார் . இந்தப் படம் கும்கி படத்திற்கு முன்பு வெளியாகி தமிழில் அறிமுகமானது.
பின்னர், பிரபு சாலமன் இயக்கத்தில், நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக கும்கி (2012) படத்தில் நடித்தார். இது அவருக்கு தமிழ் திரையுலகில் திருப்பு முனையாக அமைந்தது. தொடர்ந்து பல வெற்றி படங்களை தமிழில் கொடுத்திருக்கிறார், லட்சுமி மேனன்.
கடத்திய குழுவில் லட்சுமி மேனனும் இருந்ததாக வெளியான தகவலின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நடிகையுடன் இருந்த மிதுன், அனீஷ் மற்றும் சோனமோல் ஆகியோரை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.
இதற்கிடையில்,போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காமல், நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.