priyanka nalkari : நடிகை பிரியங்கா நல்கரி இன்ஸ்டாகிராமில் இருந்து விலகப்போவதாக திடீரென்று போஸ்ட் போட்டு உள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான “ரோஜா” சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானவரர் தான் நடிகை “பிரியங்கா நல்கரி”. இந்நிலையில் இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் இருந்து விலகப்போவதாக திடீரென்று போஸ்ட் போட்டு உள்ளார். அதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழில் ரோஜா சீரியலின் மூலம் அறிமுகமான நடிகை பிரியங்கா நல்கிரிக்கு, முதல் சீரியலிலே அதிகமான ரசிகர்கள் கிடைத்து விட்டனர்.
இந்த சீரியல் தொடங்கிய முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரைக்கும் இவரே கதாநாயகியாக மக்கள் மனதில் பதிந்திருந்தார்.
இதையும் படிங்க : இந்திரஜா- கார்த்திக் திருமணக் கூத்து.. கலாச்சார சீரழிவு! கொதிக்கும் ரசிகர்கள்!!
அதை தொடர்ந்து அந்த சீரியல் முடிவடைந்ததும் அடுத்ததாக பிரியங்கா என்ன செய்யப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்த போது “ஜீ தமிழ்” சேனலில் ஒளிபரப்பாகி வரும் “நளதமயந்தி” என்னும் சீரியலில் கதாநாயகியாக கமிட் ஆகி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அவரது திருமண புகைப்படங்கள் எல்லாவற்றையும் டெலிட் செய்திருந்தார். இது ரசிகர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னதாக ஜீ தமிழில், “சீதாராமன்” என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த இவர் அந்த சீரியல் தொடங்கி சில மாதங்களிலேயே, அவர் காதலித்து வந்த நடிகர் ராகுல் என்பவரை திருமணம் செய்து சீரியலில் இருந்து திடீரென விலகி விட்டார்.
ஆனால் திருமணம் ஆன ஒரு சில மாதங்களில் இவர்கள் இருவரும் பிரிந்து இருப்பதாக இணையத்தில் செய்திகள் வெளியாகி வந்தது.
அப்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்த பிரியங்கா நல்கரியிடம் priyanka nalkari, ரசிகர் ஒருவர் நீங்கள் தனியாக இருக்கிறீர்களா? உங்கள் கணவரை விட்டு பிரிந்து விட்டீர்களா? என்று கேட்ட கேள்விக்கு ஆம் என்று பதில் சொல்லி இருந்தார்.
இப்படியான நிலையில் நேற்று திடீரென்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், நான் நாளை மதியம் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை டெலிட் செய்ய போகிறேன்.
எனக்காக ஒரு சிலர் ப்ரோமோஷனுக்காக சாரீஸ், ஜுவல்ஸ் என சிலவற்றை அனுப்பி உள்ளீர்கள். அனுப்பிய அனைவரும் எனக்கு டிஎம் செய்யுங்கள்.
அதை நான் உங்களுக்கு ரிட்டன் செய்து விடுவேன். நான் இனி நெகட்டிவ் விஷயத்தில் இருந்து தள்ளி இருக்கப் போகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாகவும், அடிக்கடி ரசிகர்களிடம் லைவில் பேசிக் கொண்டும் இருந்த பிரியங்கா நல்கரி ஏன் இந்த திடீர் முடிவெடுத்தார் என்று குழப்பமடைந்த ரசிகர்கள் இதுகுறித்து கேள்வி கேட்டு வருகிறார்கள்.
மேலும், கணவரோடு ஏற்பட்ட பிரச்சனையால் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறீர்களா? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள் அவருடைய ரசிகர்கள்.
இதையும் படிங்க : Reserve Bank : மார்ச் 31 வங்கிகளுக்கு அதிரடி உத்தரவு! என்னவா இருக்கும்?