ITamilTv

புதிய சிக்கலில் சமந்தா..! தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலக முடிவு?

Spread the love

மயோசிட்டிஸ் பிரச்சனைக்கு மருந்துகள் மூலம் அதிக ஸ்டிராய்டு (steroid shots) எடுத்து கொண்டதால் தனது முகம் மற்றும் சருமம் அதிகம் பாதிப்பை சந்தித்திருப்பதாக சமந்தா கூறி இருக்கிறார்.

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா தற்போது விஜய் தேவாரக்கொண்டாவுடன் குஷி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

கடந்த 2021 ஆம் ஆண்டு காதல் கணவர் நாக சைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்த சமந்தா, நாக சைதன்யாவை பிரிந்த சில மாதங்களில், உடலில் உள்ள தசைகளை பாதிக்கும் மயோசிட்டிஸ் எனும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனைத் தொடர்ந்து சமந்தா விரைவில் இந்த பிரச்சனையில் இருந்து விடுபட பிரபலங்கள் பலரும், வாழ்த்து கூறினர்.


பின்னர் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுத்த சமந்தா சற்று உடல் நலம் தேறியதை அடுத்து, தன் கைவசம் இருந்த படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் மயோசிட்டிஸ் பிரச்சனைக்கு மருந்துகள் மூலம் அதிக ஸ்டிராய்டு (steroid shots) எடுத்து கொண்டதால் தனது முகம் மற்றும் சருமம் அதிகம் பாதிப்பை சந்தித்திருப்பதாக சமந்தா கூறி இருக்கிறார்.


இதானால் மயோசிட்டிஸ் பிரச்சனையில் இருந்து முழுமையாக குணமடைய தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகி, சிகிச்சை எடுக்க சமந்தா முடிவு செய்ததாக கூறப்பட்டுள்ளது. தோலில் Pigmentation அதிகம் இருப்பதால் அதை சரி செய்ய தனி சிகிச்சை எடுத்துக்கொள்ள போவதாகவும் சமந்தா கூறி இருக்கிறார்.


Spread the love
Exit mobile version