இயக்குனர் செல்வராகவனின் முன்னாள் மனைவியும், நடிகையுமான சோனியா அகர்வால் தனது மறுமணம் (remarriage) பற்றி மனம் திறந்துள்ளார். இதுகுறித்து, சோனியா அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து உள்ளார்.
அந்தப் பேட்டியில் பேசிய நடிகை சோனியா அகர்வால், “காதல் கொண்டேன்” படத்தில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இந்த பயணம் மிகவும் அழகாக இருக்கிறது. நான் இதுவரை வித்தியாசமான முகங்களை சந்தித்திருக்கிறேன். மேலும், மும்பையிலிருந்து வந்து ஷூட் முடித்துவிட்டு மீண்டும் ஊருக்கே திரும்பிச் சென்று விடுவேன்.
‘7G’ படத்தில் சாதாரணமாக தான் என் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தேன். ஆனால், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து போன் செய்து படம் 100 நாள் வெற்றிகரமாக ஓடுவதாக கூறினார்கள். இதனை கேட்டு நானே அசந்து போய்விட்டேன். மேலும், ஒரு மனிதனாக இந்தத் துறையில் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டேன். நிறைய மனிதர்களுடன் பழகியிருக்கிறேன்.
மேலும், காதல் கொண்டேன் படம் எடுக்கும்போது தனுஷ் அவ்வளவு மெனக்கெட்டு தனது நடிப்பை வெளிப்படுத்துவார். 7ஜி ரெயின்போ காலனி படப்பிடிப்பின்போது நான் அனிதா கேரக்டராகவே வாழ்ந்து விட்டேன் என்றும், அந்த படத்தை பார்த்தால் நிஜத்திலும் என் வாழ்க்கையோடு அந்த அனிதா கதாபாத்திரம் ஒத்துப்போகிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும், அனிதா என் இதயத்தோடு நெருக்கமானவள் என்றும், அந்த அனிதா நேரில் வந்தால் அவளுடன் நிறைய பேச வேண்டியிருக்கிறது எனவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய சோனியா அகர்வால், மதுர படத்தில் விஜய் மாதிரி ஒரு மாஸ் ஹீரோ உடன் நடித்த பிறகு பெரிய அளவில் கமர்ஷியல் படங்களில் நடிக்காமல் ஒரு இடைவெளி விட்டதாக கூறுகிறார்கள். ஆனால், நிஜத்தில் உச்சத்தில் இருக்கும் அந்த நேரத்தில் எல்லா பக்கமும் அழுத்தம் இருக்கும். சரியான முடிவு எடுப்பதில் குழப்பம் இருக்கும். ஒவ்வொரு ஸ்கிரிப்ட் கேட்கும்போதும் மிகுந்த அழுத்தம் இருக்கும்.
அந்த மாதிரியான கதாபாத்திரத்தில் மக்கள் கொடுத்த வரவேற்பை இன்றுவரை நான் மதிக்கிறேன். மேலும், அது மாதிரியான வரவேற்பு இருக்கும் போது படத்தை தேர்வு செய்ததில் மிகுந்த அழுத்தமும் இருக்கும். மேலும், கிடைத்த படத்தில் நடித்துவிட்டு எனக்கு கிடைத்திருக்கும் பெயரை வீணடிக்க எனக்கு விருப்பமில்லை.
எனக்கு கமர்சியல் படங்கள் வரிசையாக வந்தபோது 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என அடுத்தடுத்து படங்கள் செல்வராகவனிடம் இருந்தும் வந்தது. அவர் எனக்கு குரு என்பதால் அதனை என்னால் மறுக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், சோனியா அகர்வாலின் திருமணம் குறித்து அவரிடம் கேட்டபோது… அதற்கு பதில் அளித்த அவர், எஸ்பிபி சரணும் நானும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு தகவல் வெளியானது. ‘ஃபால்’ சீரிஸ் பண்ணும் போது கணவன் மனைவி திருமணநாள் காட்சி ஒன்று எடுத்தார்கள். அந்த காட்சிக்காக தான் நாங்கள் இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.
அதில் நாங்கள் இருவர் மட்டும் அல்ல, நான்கு பேர் சேர்ந்து இருக்கும் படி தான் அந்த புகைப்படம் இருக்கும். ஆனால், அதிலிருந்த இருவரை கட் செய்துவிட்டு எங்கள் இருவர் புகைப்படத்தை மட்டும் போட்டு பரப்பி உள்ளார்கள். இது பற்றி எனக்கு நிறைய போன் கால் வந்தது. நீங்கள் சரணை கல்யாணம் திருமணம் செய்யப் போகிறீர்களா என்று கேட்டதற்கு நான் அவர்களிடம் இல்லை என்று மறுத்து விட்டேன்.
மேலும், எத்தனை நாள் நான் இப்படி சிங்கிளாக இருப்பேன் என்றும் எனக்கு தெரியாது. ஆனால், சரியான ஆள் வரும்போது என் திருமணம் (remarriage) நடக்கலாம். ‘அவருக்காக காத்திருக்கிறேன்’.. இப்போதுவரை எனக்கான சரியான ஆளை நான் சந்திக்கவில்லை. மேலும், நான் சந்திக்கும் அந்த நபர் சிம்பிளாக இருக்க வேண்டும். நல்ல கிரியேட்டிவ் ஆக இருக்க வேண்டும்.
அவர் மீதான எதிர்பார்ப்பில் எனக்கு எந்த பில்ட்டரும் இல்லை. கர்மா மீது எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. இப்போது தான் நான் கர்மாவை உணர்கிறேன். அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் என்னால் கர்மாவை உணரமுடிகிறது. யார் ஏமாற்றினாலும், மோசடி செய்தாலும் மேலே இருப்பவர் பார்த்துக்கொண்டிருக்கிறார் என நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.