சீமானை கைது செய்ய வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி(actress vijayalakshmi) கண்ணீர் மல்க போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் நடிகை விஜயலட்சுமி(actress vijayalakshmi) நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சீமான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி ஏமாற்றியதாக கடந்த 2011-ம் ஆண்டு புகார் அளித்திருந்தேன் . அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டி உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் சீமான் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சமாதானம் செய்தார். அதனால் அவரை கைது செய்ய விடாமல் அமைதி செய்தோம். அவர் என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார். இனியும் காத்திருக்க முடியாது.
சீமானை கைது செய்ய வேண்டும். உங்க வீட்டில் ஒரு பெண்ணாக நினைத்து எனக்கு உதவுங்கள் என்று நடிகை விஜயலட்சுமி இன்று செய்தியாளர் சந்திப்பில் கண்ணீர் மல்க தெரிவித்தார்.