மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அக்கட்சிப் பிரமுகரும், நடிகையுமான வினோதினி விலகுவதாக அறிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் இதுற்கும் பிரபல குணச்சித்திர நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை வினோதினி. ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெயரையும், புகழையும் பெற்ற இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.
Also Read : இரவு நேரத்தில் ஹாரன் பயன்படுத்தக் கூடாது – தமிழ்நாடு அரசு உத்தரவு..!!
இதையடுத்து திரைப்படங்கள் மற்றும் கட்சிப்பணிகள் என இரண்டையும் கவனித்து வந்த வினோதினி தற்போது மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வருத்ததுடன் வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வினோதினி வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
“கடமைகளைத்தட்டிக்கழிக்கும் சோம்பேறி. கட்சியில் நான் செய்தது இதுதான், இதை ஒத்துக்கொள்வதில் தவறில்லை இந்த உண்மையை வெளிப்படுத்துவதன் மூலம் எனக்கு மிகப்பெரிய சுதந்திரம் கிடைக்கிறது. கமல்ஹாசன் போன்ற தலைவரைத் தவறவிட்டது தமிழ்நாடு மட்டுமல்ல, வினோதினியும்தான் என தெரிவித்துள்ளார்.