”ஒரே முத்தம்.. மொத்தமா போச்சே..”திருப்பதி கோவிலில் கீர்த்தி சனோனை கட்டிபிடித்த இயக்குனர்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆதிபுருஷ் இயக்குனர் ஓம் ராவத் நடிகை கீர்த்தி சனோனுக்கு முத்தம் கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் ஆதிபுருஷ். இப்படத்தை ஓம் ராவத் இயக்கி உள்ளார். இதில் பிரபாஸுக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார்.

பல சர்ச்சைகள் மற்றும் தடைகளுக்குப் பிறகு, பிரபாஸ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ இறுதியாக திரைக்கு வருகிறது. இப்படம் ஜூன் 16ஆம் தேதி 5 மொழிகளில் வெளியாகிறது.

இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் இப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் அதன் புரமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் ,ஆதிபுருஷ்’ படத்தின் முன் வெளியீட்டு விழா முடிந்ததும், படக்குழுவினர் இன்று காலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்.அவர்களுடன் நடிகை கீர்த்தி சனோனும் திருப்பதி கோவிலுக்கு சென்றிருந்தார்.

அதன் பிறகு,கோவிலுக்கு வெளியே கிருத்தி சனனை ஓம் ரவுத் கட்டிப்பிடித்து முத்தமிட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.‘திருமலை ஆன்மிகத் தலமாகும்.

இது டூரிங் ஸ்பாட், பிக்னிக் ஸ்பாட் அல்லது ஷூட்டிங் ஸ்பாட் அல்ல. கோயில் முன்பு இதுபோன்ற செயல்கள் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறோம்”என்று பலரும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Total
0
Shares
Related Posts