அரசு பள்ளியில் படித்து இஸ்ரோவின் ‘ஆதித்யா எல் 1’ திட்ட இயக்குநரான தமிழக பெண் நிகர்ஷாஜி!!

நாளை செப்டம்பர் 2ஆம் தேதி சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ ஆதித்யா எல் 1 விண்கலத்தை விண்ணில் செலுத்த உள்ளது.

ஆதித்யா எல் 1 விண்கலத்தின் திட்ட இயக்குனர் நிகர்ஷாஜி அரசு பள்ளியில் படித்து இஸ்ரோவின் ‘ஆதித்யா எல் 1’ திட்ட இயக்குநரான பின்னணி பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவிய சந்திராயன் 3 விண்கலம் பத்திரமாக நிலவின் தென்துருவதில் தரையரங்கியது. இது மிகப்பெரிய உலக சாதனையாக பார்க்கப்படும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள வானியல் ஆராய்ச்சியாளர்கள் உட்பட பலர் இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி வருகின்றனர்.

இஸ்ரோவின் இந்த தொடர் சாதனைகளுக்கு பின்னால் பல்வேறு தமிழர்கள் பணியாற்றி உள்ளனர். அந்த வகையில் சந்திரயான் 3 விண்களத்தின் திட்ட இயக்குனராக வீரமுத்துவேல் என்று தமிழர் தான் பணியாற்றினார். அவரின் தலைமையில் தான் சந்திரயான் 3 விண்கலம் தயார் செய்யப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரோ தனது அடுத்த ஆய்வு திட்டமான சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 திட்டத்திற்கு தயாராகி வரும் நிலையில், நாளை செப்டம்பர் 2ம் தேதி காலை சரியாக 11:05 மணிக்கு ஆதித்யா எல் 1 விண்கலத்தை விண்ணில் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

இதற்கிடையே தற்போது இந்த திட்டத்தின் திட்ட இயக்குனராக நிகர்ஷாஜி என்ற தமிழ் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நிகர்ஷாஜி தென்காசி மாவட்டம் செங்கோட்டையை பூர்வீகமாகக் கொண்டவர். ஷேக் மீரான்-சைதுள்பீவி தம்பதியினருக்கு இரண்டாவது மகளாக பிறந்த நிகர்ஷாஜி இஸ்ரோவில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தான் இவரது திறமையை பார்த்து இஸ்ரோ இவருக்கு ஆதித்யா எல் 1 விண்கலத்தின் திட்ட இயக்குனராக நியமித்தது.

நிகர்ஷாஜி செங்கோட்டையில் உள்ள எஸ்ஆர்எம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியில் தான் பள்ளிக் கல்வியை முடித்துள்ளார். பள்ளியில் முதல் மாணவியாகவும் மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதன் பின்பு நெல்லையில் உள்ள அரசு என்ஜினியரிங் கல்லூரியில் தான் தனது பட்டப் படிப்பை படித்துள்ளார்.

அதன் பின்பு தான் தனது படிப்புத் திறமையால் இஸ்ரோவில் பணியில் சேர்ந்துள்ளார் நிகர்ஷாஜி. தற்போது நிகர்ஷாஜி பெங்களூருவில் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நிகர்ஷாஜியின் மகள் டாக்டராக உள்ளார். மகன் வெளிநாட்டில் இன்ஜினியரிங் பயின்று வருகிறார்.

தமிழ் பெண்ணான நிகர்ஷாஜி அரசு பள்ளியில் படித்து தற்போது இஸ்ரோவின் ஆதித்யா எல் 1 விண்கலத்தின் திட்ட இயக்குனராகப் பணியாற்றி வருவது தமிழர்களுக்கு பெருமையை கொண்டு வந்துள்ளது.

இஸ்ரோவில் தொடர்ந்து தமிழர்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் நிலையில், நாளை விண்ணில் பாய உள்ள ஆதித்யா எல் 1 விண்களம் அடுத்த நான்கு மாதம் தொடர்ந்து பயணித்து சூரியனை சுற்றியுள்ள எல் 1 என்ற பகுதிக்கு சென்று சூரியனை ஆய்வு செய்யப் போகிறது. இது தமிழர்களுக்கு மிகவும் பெருமையான தருணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Total
0
Shares
Related Posts