தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின் ஸ்டீஃபர்ன் ராஜை கேரள சைபர் கிரைம் போலீசார் மதுரையில் கைது செய்துள்ளனர் .
பல கொடிகளை போட்டு ஏராளமான மக்களின் உழைப்பிற்கு மத்தியில் உருவாகும் புதிய திரைப்படங்களை இணையதளத்தில் அசால்டாக பதிவேற்றும் செய்து நாடு முழுவதும் பிரபலமான இணைய தளம் தான் தமிழ் ராக்கர்ஸ் .
இந்நிலையில் திரைத்துறையை சேர்ந்த பலரும் இந்த இணையதளத்தை முடிக்க கோரிக்கும் இதற்கு பின்னால் இருப்பவர்களை கைது செய்யக்கோரியும் பல புகார்கள் எழுந்த நிலையில் இந்த கும்பலை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
Also Read : ஸ்டாலினுக்கு முதல்வர் பொறுப்பில் நீடிக்கும் உரிமை உள்ளதா..? – அண்ணாமலை விளாசல்..!!
இந்நிலையில் தற்போது இந்த தளத்தின் முக்கிய அட்மின் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இணைய தளத்தின் அட்மினான் ஸ்டீபன் ராஜ் ஒரு படத்திற்கு ரூ.5000 கமிஷன் பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து கைது செய்து தற்போது போலீஸ் கஸ்டடியில் இருக்கும் ஸ்டீபன் ராஜ் இடம் கிடுக்குபிடி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.