கடலூர் பாதிரிக்குப்பத்தில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரண உதவி முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.
கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகள் மழை நீர் சூழ்ந்து வீடுகள் சேதமடைந்தன. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்ட நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டுமென நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த நிலையில், கடலூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகள் உள்ளன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோளின்படி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பாதிரிக்குப்பத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், கடலூர் மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கி ஆயிரம் பேருக்கு அரிசி மற்றும் நிவாரண உதவிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.