எல்லைகளில் மதுவிலக்கு சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது,
“விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலையளிக்கிறது.
நான் ஏற்கனவே சொன்னது போல, அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று விடியா தி.மு.க. முதல்-அமைச்சர் செயல்படுவது எந்த பலனும் அளிக்காது.
இதையும் படிங்க : கடத்தல் சாராயம்.. 7 பேருக்கு உடல்நலக்குறைவு – டிடிவி தினகரன் கண்டனம்!
அடிப்படை நிர்வாகச் சீரமைப்பில் கவனம் செலுத்தாமல் கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த திராணியற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், அண்டை மாநில சாராயங்கள் புழங்குவதை தடுப்பது அரசின் கடமை என்பதை உணர்ந்து, எல்லைகளில் மதுவிலக்கு சோதனையை தீவிரப்படுத்தவும் விடியா தி.மு.க. முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார் Edappadi Palaniswami.