Advertisement rejected by Sai Pallavi : நடிகை சாய் பல்லவிக்கு பிரபல நிறுவனம் தங்களது விளம்பரத்தில் நடிக்க 2 கோடி சம்பளம் தருவதாக கூறியும் அதில் நடிக்க மறுத்துள்ளார்.
சினிமா பிரபலங்கள் பலரும் படங்களில் நடித்து வருமானம் ஈட்டுவது மட்டுமின்றி பல விளம்பரங்களிலும் நடித்து கோடி கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : 23 வகை வெளிநாட்டு நாய்களுக்கு தடை – தமிழ்நாடு அரசு உத்தரவு!
குறிப்பாக அழகு சாதன பொருட்கள், குளிர்பானங்கள் தொடங்கி புகையிலை பொருட்கள் வரை அனைத்து வகையான விளம்பரங்களிலும் நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.
அவர்கள் நடிக்கும் விளம்பரங்கள் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களாக இருந்தாலும் அதை கருத்தில் கொள்ளாமல் பணத்தின் மீதான ஆசையில் அதில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் சுத்த சைவமாக இருக்கும் நடிகர், நடிகைகள் கூட அசைவ உணவு விளம்பரங்களை புரொமோட் செய்யும் விபரங்களில் நடிக்கின்றனர்.
இவை அனைத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது பணம் தான். இதனால் இந்த நடிகர் நடிகைகளை பார்த்து அந்த விளம்பரங்களில் வரும் பொருட்களை அவர்களது ரசிகர்களும் உடனடியாக வாங்கி விடுகின்றனர்.
இது போன்று மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை விளம்பரம் செய்ய மாட்டேன் என்று ஒரு சில நடிகர், நடிகைகளும் தீர்க்கமாக இருக்கின்றார்கள்.
அந்த பட்டியலில் இருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி. கடந்த 2019 ஆம் ஆண்டு முன்னணி அழகு சாதன கிரீம் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தங்களுடைய கம்பெனி விளம்பரத்தில் நடிக்க வேண்டும் என்று சாய் பல்லவியை அணுகி உள்ளனர்.
ஆனால் அந்த விளம்பரத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று சாய் பல்லவி உறுதியாக கூறி விட்டாராம். அவருக்கு இரண்டு கோடி ரூபாய் சம்பளம் தருவதாகவும் டீல் பேசியிருக்கிறார்கள் அந்த முன்னணி நிறுவனத்தினர்.
ஆனால், அவர்களின் பண ஆசைக்கு செவி சாய்க்காத சாய் பல்லவி நீங்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த விளம்பரத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டாராம்.
குறிப்பாக நடிகை சாய்பல்லவி சினிமாவிலும், ரியல் லைஃபிலும் கூட மேக்கப் இல்லாமல் இயல்பான தோற்றத்தில் தான் இருக்க விரும்புவார்.
அது மட்டும் அல்லாமல் அவர் ஒரு மருத்துவர் என்பதாலும், அழகு சாதன பொருட்களால் சருமத்திற்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் அவர் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்.
எனவே தான் அழகு சாதன நிறுவன விளம்பரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார் சாய் பல்லவி என்பது குறிப்பிடத்தக்கது Advertisement rejected by Sai Pallavi.
இதையும் படிங்க : வெளியானது ‘ராயன்’ பட ‘அடங்காத அசுரன்’ பாடல்!