ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவம் படிக்கத் தடை தாலிபான் அரசு தடை விதித்துள்ள சம்பவத்திற்கு அந்நாட்டின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வேதனை தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த சில ஆண்டுகளாக தாலிபான்கள் ஆண்டு வரும் நிலையில் அந்நாட்டில் பெண்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது . பெண்களுக்கு எதிராக நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் அந்நாட்டில் உள்ள பெண்கள் தற்போது மெல்ல மெல்ல தாலிபான் அரசுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவம் படிக்கத் தடை தாலிபான் அரசு தடை விதித்துள்ள சம்பவத்திற்கு அந்நாட்டின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வேதனை தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் நர்சிங் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை பெண்கள் பயில தாலிபான் அரசு தடை விதித்திருப்பது வேதனை தருகிறது எனவே இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். கற்றலின் முக்கியத்துவத்தை குர்ஆன் வலியுறுத்துகிறது.
ஆப்கன் பெண்கள் தங்களது கல்வி உரிமையை மீட்டெடுத்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும். அனைவருக்கும் கல்வியை வழங்குவது ஒரு சமூகப் பொறுப்பு மட்டுமல்ல. அது நமது தார்மீகக் கடமை என ரஷித் கான் தெரிவித்துள்ளார்.