ITamilTv

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – உயிரிழப்பு 1000ஆக உயர்வு..!!

Spread the love

மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு தலிபான் அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

பல உள்நாட்டு போர்களை கடந்து தற்போது தலிபான்களிடம் உள்ள ஆப்கானித்தான் நாட்டில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது . ஈரானின் எல்லைக்கு அருகில் உள்ள மேற்கு நகரமான ஹெராட்டில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ளூர் நேரப்படி 11:00 மணியளவில் 6.3 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த பயங்கர நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியும் பல கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன . பல அப்பாவி மக்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் . இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து ரிக்டர் அளவுகளில் 6.1, 5.6, 6.2, 5.9, 5.0, 4.7 என 7 முறை நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அந்நாட்டில் உள்ள அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஏரளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் இந்த இடர்பாடுகளில் சிக்குள்ள மக்களை மிடுக்கும் பணிகள் தற்போது தீவிரமான நடைபெற்று வருகிறது .

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐ தாண்டியுள்ளதாக அந்நாட்டை ஆளும் தலிபான் அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது

ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் ஏற்கனவே பல தாங்க முடியாத கஷ்டங்களை அனுபவித்து வரும் நிலையில் தற்போது அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Spread the love
Exit mobile version