டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே நேற்று நடைபெற்ற வங்கதேச அணி எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினர்.
இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக முறை 4 விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை ரஷித் கான் நிகழ்த்தி உள்ளார்.
Also Read : முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!!
ரஷித் கானின் இந்த அபார ஆட்டத்தை கண்டு தற்போது ஆப்கான் மக்கள் உள்பட பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
இதுமட்டுமின்றி டி20 உலக கோப்பை தொடரில் முதல்முறையாக ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், அதனை திருவிழா போல அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள Khost நகரத்தில் நேற்று நள்ளிரவு கூடிய மக்கள் கூட்டத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.