ITamilTv

இரண்டு படங்களில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட லேடி சூப்பர் ஸ்டார்? கோலிவுட்டில் பரபரப்பு..!

Spread the love

நடிகை நயன்தாரா (nayanthara) அடுத்தடுத்து இரண்டு படங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தில் சசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

7 வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் (nayanthara) கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் வாடகைத் தாய் முறையில் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளுக்கு உயிர், உலகம் என பெயரிட்டுள்ளனர்.

திருமணத்திற்குப் பின்னர் நயன்தாரா, சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்த நிலையில், குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்காக கடந்த சில மாதங்களாக சினிமாவுக்கு ரெஸ்ட் விட்டிருந்த நயன் தற்போது மீண்டும் தனது பணிகளை தொடங்கி உள்ளார்.

இதனையடுத்து, நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ள இறைவன் என்கிற திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், பிசியான நடிகையாக வலம் வந்த நயன்தாரா, தற்போது அடுத்தடுத்து இரண்டு படங்களில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ள தகவல் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக பேசப்பட்டு வருகிறது.

 

nayanthara

கடந்த 2021-ம் ஆண்டு முன்னணி தயாரிப்பாளரின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் 2 படங்களில் நாயகியாக நடிக்க நயன்தாரா கமிட் ஆன நிலையில், இதற்காக படத்துக்கு தலா ரூ.10 கோடி வீதம் மொத்தமாக ரூ.20 கோடி சம்பளமாக பேசப்பட்டு இருந்துள்ளது.

ஆனால், இரண்டு வருடங்களுக்கு மேல் ஆன நிலையில், படத்திற்கான கால்ஷீட் கொடுக்காமல் நடிகை நயன்தாரா இழுத்தடித்து வந்ததாகவும், இதனால் கடுப்பான தயாரிப்பாளர், நயன்தாரா உடனான 2 படத்திற்கான ஒப்பந்தத்தை கேன்சல் செய்ததோடு, அவருக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் தொகையையும் திருப்பி வாங்கி விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

முன்னதாக, அஜித்தின் “ஏகே 62” படத்தில் இருந்து நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நடிகை நயன்தாராவும் அடுத்தடுத்து இரண்டு படங்களில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ள தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 


Spread the love
Exit mobile version