சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு காலை நேரத்தில் மட்டும் அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் சேவையை வழங்கி வந்த நிலையில், இனி பிற்பகலில் விமானச் சேவையை வழங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை – யாழ்ப்பாணம் – சென்னை இடையே புதிய விமானச் சேவையை, செப்டம்பர் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Also Read : ஹசீனாவின் அடைக்கலம் தற்காலிகமானதே – இந்திய அரசு விளக்கம்..!!
சென்னையில் பகல் 1.55 மணிக்கு புறப்படும் இந்த விமானம், மாலை 3.10 மணிக்கு யாழ்ப்பாணம் சென்றடையும். மாலை 3.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, மாலை 5.10 மணிக்கு மீண்டும் சென்னை வந்தடையும். இதற்கான பயணக்கட்டணம் 7,604ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக செல்ல அன்மையில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில் தற்போது விமான சேவையும் தொடங்கப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.