பதவி ஆசை பிடித்த எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அதிமுக ஒருங்கிணைய வாய்ப்பில்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக சார்பில் தேனியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார் . இக்கூட்டத்தில் நடந்து முடிந்த தேர்தல் தோல்வி குறித்தும், 2026 ஆம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல், மற்றும் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கட்சியினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
Also Read : மருங்கூர் அகழாய்வில் செம்பினால் ஆன பழங்கால அஞ்சனக்கோல் கண்டெடுப்பு..!!
இதையடுத்து கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் கூறிருப்பதாவது :
பதவி ஆசை பிடித்த எடப்பாடி பழனிசாமி என்ற சுயநலவாதி இருக்கும் வரை அதிமுக ஒருங்கிணைய வாய்ப்பில்லை. ஜெயலலிதா தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு 100 சதவீதம் உள்ளது என தெரிவித்தார்.