ரவுடி சுரேஷ்கொலை வழக்கில் சிக்கிய அதிமுக முக்கிய புள்ளி.. EPS அதிரடி!!

சென்னையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான அதிமுக நிர்வாகிகள் இருவரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி (edappadi palanisamy) உத்தரவிட்டுள்ளார்.

சென்னை புளியந்தோப்பு நரசிம்ம நகரை சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் மீது பல கொலை வழக்குகள் விசாரணையில் உள்ள நிலையில் அந்த வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 18 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தனது வழக்கறிஞருடன் எழும்பூர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.

இதனை தொடர்ந்து மாலை தனது நண்பர் மாதவன் உடன் பட்டினம்பாக்கத்தில் உள்ள மீனவ உணவகத்திற்கு ரவுடி சுரேஷ் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது அங்கு காரில் வந்த அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அரிவாளால் ஆற்காடு சுரேஷை சரமாரியாக வெட்டியது.

இதில் படுகாயமடைந்த ஆற்காடு சுரேஷை அருகிலிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில்,ரவுடி கொலை வழக்கில் அதிமுக நிர்வாகிகள் தொடர்பு இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரிவந்துள்ளது. இதனை தொடர்ந்து அதிமுக கட்சியில் இருந்து பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும்கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த,
திரு. C. ஜான்கென்னடி,(ஆயிரம்விளக்கு வடக்கு பகுதிக் கழக மாவட்டப் பிரதிநிதி)திரு. B. சுதாகர் பிரசாத்,(111 கிழக்கு வட்டக் கழகச் செயலாளர், ஆயிரம்விளக்கு வடக்கு பகுதி)ஆகியோர்,

இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Total
0
Shares
Related Posts