Site icon ITamilTv

கடலூரில் அதிமுக பிரமுகர் படுகொலை..!!

Cuddalore

Cuddalore

Spread the love

கடலூரில் உள்ள முக்கிய வீதியில் அதிமுக பிரமுகர் ஓட ஓட வெட்டி ;படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் வண்டிப்பாளையம் ஆலை காலனியை சேர்ந்தவர் புஷ்பநாதன் . 45 வயதாகும் இவர் கடலூர் நகராட்சியின் முன்னாள் அதிமுக கவுன்சிலராக இருந்தவர் .

இந்நிலையில் நேற்று நள்ளிரவு புஷ்பநாதன் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது திடீரென வந்த மர்ம கும்பல் புஷ்பநாதனை வழிமறித்தது அவரை கொலைசெய்ய முயன்றது . நின்றாள் கொலைசெய்துவிடுவார்கள் என்று இனிய புஷ்பநாதன் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு ஓடியுள்ளார்.

Also Read : கிக் இல்லாததால் கள்ளச்சாராயத்தை தேடும் குடிமகன்கள் – துரைமுருகனின் பேச்சுக்கு ஓபிஎஸ் கண்டனம்..!!

உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடிய புஷ்பநாதனை விடாமல் விரட்டிய அந்த கும்பல் முக்கிய வீதியில் வைத்து புஷ்பநாதனை சரமாரியாக வெட்டியுள்ளது . இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த புஷ்பநாதன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார் .

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் புஷ்பநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவனமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுமட்டுமின்றி நள்ளிரவில் நடந்த இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்கு பந்தித்துள்ள காவல்துறையினர் கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.


Spread the love
Exit mobile version