அமைச்சர் கே என் நேருவின் காரை அதிமுகவினர் – முற்றுகையில் ஏற்பட்ட பரபரப்பு!

Spread the love

திருச்சி மாவட்டம் துறையூரில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேருவின் காரை அதிமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் மற்றும் ஒப்பந்ததாரர் செல்வராஜ் ஆகியோர் கடந்த 2020ம் ஆண்டு குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் பணிகள் செய்துள்ளனர்.

அதற்கான பட்டியல் தொகை சுமார் ரூபாய் 7 லட்சம் இதுவரை வழங்கவில்லை என கூறபடுகிறது. இத்தொகை குறித்து பலமுறை ஒன்றிய நிர்வாகத்தை அணுகியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இதையடுத்து ரமேஷ் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரும் ஒன்றிய அலுவலக வளாகத்தில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
உடனடியாக அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது பற்றி தகவல் அறிந்த அதிமுகவினர் துறையூர் பாலக்கரை பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்பொழுது சேலத்தில் நடைபெற உள்ள மாநாட்டு வேலைகளை பார்வையிட்டு அங்கிருந்து துறையூர் வழியாக திருச்சி செல்வதற்காக அமைச்சர் கே.என்.நேரு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் துறையூர் பாலக்கரை பகுதியில் மறியலில் ஈடுபட்டிருந்த அதிமுகவினர் அமைச்சரின் காரை முற்றுகையிட்டு தங்களது குற்றச்சாட்டுகளை கூறினார்.

இது குறித்து விசாரித்த அமைச்சர் நாளையே உரிய பட்டியல் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் அதிமுகவினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Spread the love
Related Posts