சட்டப்பேரவைக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்த காரணத்தால் பேரவை விதிகளின்படி நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து அதிமுகவினர் தினமும் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்து தங்களது எதிர்ப்பை கடுமையாக தெரிவித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டதுடன், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சட்டப்பேரவையின் 4ம் நாளான இன்றும் (ஜூன் 26) அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர் . இதையடுத்து சட்டப்பேரவை தொடங்கியதும், கேள்வி நேரத்தை நடத்த பேரவைத் தலைவர் அப்பாவு முயன்றபோது . அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வழக்கம் போல் கோஷங்களை எழுப்பியதால் பேரவையில் சற்று சலசலப்பு நிலவியது.
அதிமுகவினரை அமைதியாக்க எவ்ளோவோ முயன்றும் தோல்வியில் முடிந்ததால் சட்டப்பேரவைக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்த காரணத்தால் பேரவை விதிகளின்படி நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.