ITamilTv

”பாஜக கூட்டணிக்கு செல்ல பாமகவிற்கு நிர்பந்தம்..”அதிமுக முன்னாள்அமைச்சர் பரபர

PMK-BJP alliance

Spread the love

PMK-BJP alliance பாஜக கூட்டணிக்கு செல்ல பாமகவிற்கு என்ன நிர்பந்தம் என தெரியவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கருத்து தெரிவித்துள்ளார்.மக்களவை தேர்தல் 2024 தேர்தலில் ஆட்சியை அமைக்க திமுக,அதிமுக,பாஜக,பாமக,தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறனர்.

அந்த வகையில் தமிழகத்தின் பிரதான கட்சியும், ஆளுங்கட்சியுமான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டையே முடித்து வேட்பாளர்களையே அறிவிக்கும் நிலைக்கு சென்று விட்டது. ஆனால், எதிர்க்கட்சியும் மற்றுமொரு பிரதான கட்சியுமான அதிமுக இன்னும் கூட்டணி கட்சிகளை முடிவு செய்வதிலேயே இழுபறி நீடித்து வருகிறது.

திமுக கூட்டணி:

தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய முஸ்லீம் லீக் மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் இவற்றிற்கான தொகுதி பங்கீடுகளும் முடிந்து தமிழ்நாடு-புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 19 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.

PMK-BJP alliance

அதிமுக கூட்டணி ?

ஆனால் இந்த சூழலில் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான இருக்கக்கூடிய அதிமுக பொறுத்தவரை இதுவரை எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்போகிறோம் என்பதையே வெளியிடாமல் இருக்கின்றது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி பா.ஜ.க., பாட்டாளிPMK-BJP alliance மக்கள் கட்சி, புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம், தமிழ்மாநில காங்கிரஸ், தேமுதிக மற்றும் இதர சிறுகட்சிகளும் இடம்பெற்றிருந்தன.அதே போல் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தமிழ்மாநில காங்கிரஸ், புதிய பாரதம் மற்றும் இதர சிறு கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன.

ஆனால் அந்த தேர்தல் அதிமுகவிற்கு பலத்தை தரவில்லை .மேலும் பாஜகவின் கூட்டணியால் தான் தேர்தலில் தோல்வியை சந்தித்ததாக கருத்துக்கள் நிலவி வந்தனர்.இதனையடுத்து சமீபத்தில் பாஜக – அதிமுகவு இடையே கருத்து வேறுபாடு உச்சத்தை எட்டிய நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிவதாக அறிவித்தது.

பாமக -பாஜகயுடன் கூட்டணி:

தமிழக பாஜகவை பொறுத்தவரை அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் பெரிய ஆர்வம் காட்டுவது போல் தெரியவில்லை என்றாலும் பாஜகவின் மூத்த தலைவர் அமித்ஷா இன்னமும் கூட்டணிக்கான கதவுகள் திறந்திருப்பதாகவே தெரிவித்து இருந்தார்.

அதே சமயம் பாமகவும் அதிமுகவும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. மேலும் பாமக -அதிமுக கூட்டணியில் தான் அமையும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில், பாமக -பாஜகயுடன் கூட்டணி அமைத்து அதிமுகவினேரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பாமக -பாஜகயுடன் கூட்டணி குறித்து இறுதி முடிவை எடுப்பதற்காக திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக உயர்நிலை குழு ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது.

இதையும் படிங்க: “இதுக்குத்தாங்க பாமகவோட கூட்டணி..!” – அண்ணாமலை சொன்ன ‘அடடே’ காரணம்!

அதில், இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “10 ஆண்டு காலமாக பாட்டாளி மக்கள் கட்சி டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருந்து வருகிறது. வருகிற மக்களவைத் தேர்தலை தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து சந்திக்க கட்சி முடிவு செய்திருக்கிறது.

இதற்கிடையே, அன்புமணியிடம் பேச்சுவார்த்தை நடத்திய பாஜக மேலிட பொறுப்பாளர்களான வி.கே.சிங், கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் 10 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாகவும், மீண்டும் ஆட்சி அமைந்த பிறகு மத்திய அமைச்சர் பதவி பற்றி பேசி முடிவு செய்வதாகவும் உறுதி அளித்தனர்.

இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட நிலையில், பாமக எந்த பக்கம் நகரும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது பாஜக – பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த நிலையில் ,பாஜக கூட்டணிக்கு செல்ல பாமகவிற்கு என்ன நிர்பந்தம் என தெரியவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கருத்து தெரிவித்துள்ளார்.

என்ன நிர்பந்தம் :

இந்த நிலையில் பாஜக கூட்டணிக்கு செல்ல பாமகவிற்கு என்ன நிர்பந்தம் என தெரியவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து தனியார் தொலைகட்சிக்கு பேட்டியளித்த அவர்,

அதிமுக, பாஜக என இரு தரப்பிலும் பாமக பேச்சுவார்த்தை நடத்தியது; கூட்டணி தொடர்பாக நிர்வாகிகளின் கருத்தை பாமக கேட்கவில்லை; பாஜக உடன் கூட்டணி என்ற முடிவைதான் நிர்வாகிகளிடம் பாமக கூறியது பாஜக கூட்டணிக்கு செல்ல பாமகவிற்கு என்ன நிர்பந்தம் என தெரியவில்லை; மாற்றம் வேண்டுமென்றால் அதிமுக கூட்டணிக்குதான் வந்திருக்க வேண்டும்.

மாநில உரிமைக்கு மட்டும்தான் அதிமுக முக்கியத்துவம் தருகிறது; மாநில உரிமையை காப்பாற்றவே பாஜக உடனான உறவை துண்டித்தோம்.2026தான் இலக்கு என்றால் முதலமைச்சர் பதவி பாமகவிற்காக? பாஜகவிற்கா?; அரசனை நம்பி புருஷனை கைவிட்டுள்ளது பாமக“பாஜக கூட்டணிக்கு செல்ல பாமகவிற்கு என்ன நிர்பந்தம் என தெரியவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் திமுக எதிர்ப்பு என்ற புள்ளியில் கூட்டணியை இணைக்கவே விரும்பினோம்; திமுக-வுக்கு எதிரான வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் சேர வேண்டும் என்றுதான் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டினோம்; அதிமுகவின் அரசியல் எதிரி திமுக; கொள்கை எதிரி பாஜக; தற்போது வாக்கு சதவீதத்தை உயர்த்தி, 2026இல் ஆட்சியை பிடிப்போம்

தனித்துப் போட்டியிடவும் அதிமுக தயாராக உள்ளது; மக்கள் ஆதரவு அதிமுகவிற்கு உள்ளது; மெகா கூட்டணி என்பது ஈபிஎஸ் சொன்னது மக்களுடனான கூட்டணியை தான் என்று கருத்து தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version