இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஒரே நாளில் தனது குடும்பத்தில் உள்ள 4 பேரை பறிகொடுத்த நபர் கண்ணீர் விட்டு அழும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் போர் இன்று வரை கொடூரமாக நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலால் காஸாவில் உள்ள பல அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.
பாரபட்சமின்றி நடைபெற்று வரும் இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்து வரும் நிலையில் இஸ்ரேல் தனது தாக்குதலை விட்டவண்ணம் இல்லை.
Also Read : ஆபாச கருத்துக்களை பதிவிட்டு வரும் நபர்களுக்கு எம்பி ஜோதிமணி கண்டனம்..!!
இந்நிலையில் சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஒரே நாளில் தனது குடும்பத்தில் உள்ள 4 பேரை பறிகொடுத்த நபர் கண்ணீர் விட்டு அழும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
பிறந்து 4 நாட்களே ஆன தனது இரட்டை குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க சென்ற நேரத்தில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள், மனைவி, மாமியார் என அனைவரையும் துடிதுடித்து இறந்துள்ளனர் .
ஆசை ஆசையாய் பிறப்பு சான்றிதழை வாங்க சென்ற அந்த நபர் குடும்பத்தை இழந்து மருத்துவமனையின் முன் கதறி அழுத காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.