ITamilTv

கவர்ச்சி நடிகை யாஷிகாவுடன் லாங் டிரைவ் சென்ற அஜித் மச்சான்..! மாமாகுட்டியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..

Spread the love

தமிழ் சினிமாவில் இளசுகளுக்கு கருத்தான படத்தை கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் பலரது கடின உழைப்பில் உருவான படம் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து. இந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு கவர்ச்சி நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.

கவர்ச்சிக்கு பஞ்சமில்லாத கதாபாத்திரங்களை தேடி தேடி தேர்வு செய்து நடித்து வந்த இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனம்கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வந்தன.

அந்த வகையில் மகத்துடன் இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீமா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், ஜீவனின் பாம்பாட்டம் ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார் .

இதற்கிடையில் நைட் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டு நண்பர்களுடன் காரில் வீடு திரும்பியபோது ஏற்பட்ட கோர விபத்தில் படுகாயமடைந்த யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சைக்கு பின் தற்போது மீண்டும் போட்டோஷூட்டினை ஆரம்பித்து பங்கமான பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் .

சினிமாவில் கவர்ச்சி நடிகையாக பிரபலமடைந்த இவர் பலருடன் டேட்டிங் செய்து வந்த நிலையில் நடிகை ஷாலினியின் சகோதரரும், நடிகர் அஜித்தின் மச்சினனுமான நடிகர் ரிச்சர்ட் ரிஷியை தான் யாஷிகா தற்போது காதலித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது .

அதனை உறுதி செய்யும் வகையில் கடந்த சில வாரங்களாக இவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் மூலம் வெளியாகி செம வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது யாஷிகா உடன் காரில் அமர்ந்தபடி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள ரிச்சர்ட் ரிஷி, லாங் டிரைவ் போவதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ரிச்சர்ட் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே அந்த புகைப்படங்கள் வைரல் ஆன நிலையில் யாஷிகா உடனான லாங் டிரைவ் எப்படி இருந்தது மாமாக்குட்டி என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர் . ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள நடிகை யாஷிகா ரிச்சர்ட் போட்ட பதிவால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது சினிமா வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது .

https://www.instagram.com/p/CtDq7yrrqZd/?igshid=MmJiY2I4NDBkZg==


Spread the love
Exit mobile version