உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் முதல் திரை பிரபலங்கள் வரை அனைவரது சமூக வலைத்தள பக்கங்களிலும் ‘ALL EYES ON RAFAH’ என்ற போஸ்டர் பதிவிடப்பட்டு செம வைரலாகி வருகிறது.
காசாவின் ரஃபா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நிகழ்த்திய கொடூர தாக்குதலில், குழந்தைகள் உள்பட 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் .
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது ‘ALL EYES ON RAFAH’ என்ற போஸ்ட்டரை பொதுமக்கள் திரை பிரபலங்கள் என பல கோடி பேர் தங்களது சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர் .
இதில் இந்தியாவின் பிரபலங்களான சானியா மிர்சா, த்ரிஷா, சமந்தா, துல்கர் சல்மான், அட்லீ, ஹன்சிகா உள்ளிட்ட நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், அரசியல் பிரபலங்கள் என பலரும் இந்த போஸ்ட்டரை பகிர்ந்து ரத்தமும் கண்ணீரும் சிந்தி வரும் பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சொந்த நாட்டிலேயே அகதிகள் போல பொதுமக்கள் அதிகம் அடைக்கலம் புகுந்திருந்த RAFAH என்ற இடத்தில் தாக்குதல் நடத்தமாட்டோம் என உறுதியளித்திருந்த இஸ்ரேல் . தீவிரவாதிகள் இருப்பதாக கூறி இரவோடு இரவாக நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.