சென்னையில் இயங்கி வந்த அரசு பள்ளி ஒன்றில் ஆன்மீக வகுப்பு நடத்தியதால் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக பிரபல ஆன்மீக சொற்பொழிவாளரும், பரம்பொருள் யோகா நிறுவனருமான மகாவிஷ்ணு மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் நாட்கள் நகர இதுகுறித்த சுவடுகள் மெல்ல மெல்ல மறைந்து தற்போது மகாவிஷ்ணுவின் சத்சங்கங்களை கேட்க பக்தர்கள் கூறும் குவிந்த வண்ணம் உள்ளது .
நேரிலும் சமூக வலைதளங்களிலும் லட்சக்கணக்கானோர் சத்சங்கத்தை பின்தொடர்ந்தனர். இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கோவை செல்வபுரம் பகுதியில் தனியார் மண்டபத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு சத்சங்க நிகழ்வு நடைபெற்றது.
இந்த சத்சங்கத்தில் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்தும், மலேசியா,சிங்கப்பூர்,ஸ்ரீலங்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தனியார் மண்டபம் முன்பு திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சத்சங்க நிகழ்வுக்கு இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், நகைச்சுவை கலைஞர் மதுரைமுத்து, பட்ணிமன்ற பேச்சாளர் அன்னபாரதி ஆகியோரின் நகைச்சுவை நிகழ்ச்சியும், முத்துச்சிற்பி குழுவினரின் பக்தி பாடல்கள் மற்றும் ஆன்மீக பெரியோர்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைப்பட துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது தமிழகத்தை சேர்ந்த மிகப்பெரிய ஆன்மீக குரு ஒருவர் தன்னுடைய அடுத்த வாரிசாக மகாவிஷ்ணுவை அறிவிக்கப் போவதாக வந்த தகவலை பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அனைவருமே வாரிசு தான், நடப்பதெல்லாம் நல்லவைக்கே என்று தெரிவித்தார்.