”இனிமேலும் பொறுத்துகொள்ள முடியாது” – எஸ்.வி சேகருக்கு எதிராக பொங்கிய அமர் பிரசாத் ரெட்டி!

அண்ணாமலை குறித்து எஸ்.வி. சேகர் பேசியது தொடர்பாக தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி ஆவேசமாக டுவிட்டரில் பதிவிட்டிருப்பது பெரும் புயலை பாஜகவில் கிளப்பியிருக்கிறது.

பாஜகவின் உறுப்பினராக இருக்கும் எஸ்.வி.சேகர் பல்வேறு சர்ச்சைக்குறிய கருத்துக்களை வெளிப்படையாக பேசிவருபவர். பாஜகவிலேயே உறுப்பினராக இருந்தாலும் கட்சியில் பொறுப்பு வழங்கப்படாதது குறித்து பல்வேறு நேரங்களில் தனது அதிருப்தியை சில நேர்காணல்களில் வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும் அண்ணாமலைக்கு சாதி வெறி இருப்பதாகவும் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் எஸ்.வி. சேகர், பிராமணர்கள் எதிர்ப்பு தான் அண்ணாமலையின் நாடியில் ஊறி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், பிராமணர்களுக்காக புதிய கட்சியை தொடங்கபோவதாகவும் பேசியிருந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் எஸ்.வி.சேகர் பேசிய ஆடியோவை பதிவிட்டு அமர் பிரசாத் ரெட்டி ஆவேசமாக டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த ஆடியோவில், ”இந்த மாதிரி உளறது ரொம்ப சங்கடமா இருக்கு.. இத்தனை பணம், படைபலம் கொடுத்தும் ஒரு சீட் கூட ஜெயிக்கமுடியலன்னா அதுமுகராசி.. இந்த மூஞ்சிக்குலாம் எப்டிடா ஓட்டு போடுறதுன்னு மக்கள் போயிடுறாங்க.. மூஞ்சி மக்களுக்கு நம்பிக்கை கொடுக்குறமாதிரி இருக்கணும்.. அண்ணாமலை மூஞ்சி நம்பிக்கை கொடுக்குற மூஞ்சியா இல்ல” என ஆடியோ குரல் பதிவில் இடம்பெற்றுள்ளது.


இதனை கண்டித்து பதிவிட்டுள்ள அமர் பிரசாத் ரெட்டி, “இனிமேலும் எங்களால் இந்த தரம் தாழ்ந்த முறைகேட்டை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த நபரை கட்சியை விட்டு நீக்க வேண்டும்..
பாஜகவின் பைலாப்படி, ”ஒழுக்க மீறல்” இவருக்கு நேரடியாக பொறுந்தும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கோரிக்கை விடுத்து தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக பேசி விமர்சித்து வந்த எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் கோரிக்கை விடுத்திருப்பது தமிழக பாஜகவில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

Total
0
Shares
Related Posts