கோவையில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் வீட்டிலேயே பிரசவம் பார்த்த திக் திக் சம்பவம் நடந்துள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் அருகே காயத்ரி என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார் . இந்நிலையில் அவருக்கு திடீரென பிரசவ வலி வந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல உறவினர்கள் ஆம்புலன்ஸ் அழைத்துள்ளனர் .
இதையடுத்து மருத்துவ உதவியாளர் ராமு மற்றும் ஓட்டுநர் சந்திரசேகர், காயத்ரியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக வீட்டிற்கு விரைந்து சென்றபோது குழந்தை பிறக்கும் தருவாயில் இருந்ததால், நிலைமையை புரிந்துகொண்டு உடனடியாக வீட்டில் பிரசவம் பார்த்து 2 உயிர்களையும் காப்பாற்றியுள்ளனர்.
பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி காயத்ரிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரின் சாமர்த்தியத்தால் .காயத்திரிக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் நலமுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணின் நிலைமையை புரிந்துகொண்டு அவர்களுக்கு நல்லபடியாக பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சந்திரசேகர் மற்றும் மருத்துவ உதவியாளர் ராமு ஆகியோருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.