Site icon ITamilTv

ரோமானியாவில் பொக்கிஷமாக மாறிய பழைய கல்..!!

Romania

Romania

Spread the love

ரோமானியாவில் மூதாட்டி ஒருவர் நீண்ட காலமாக வைத்திருந்த பழைய கல் இன்று பல கோடி மதிப்புள்ள பொக்கிஷமாக மாறியுள்ள சம்பவம் மூதாட்டியின் குடும்பத்தினருக்கு மட்டற்ற மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

ஐரோப்பாவின் ரோமானியாவில் மூதாட்டி ஒருவர் கதவு மூடாமல் இருப்பதற்காக நீண்ட நெடு வருடங்களாக பழைய கல் ஒன்றை வைத்திருந்துள்ளார்.

Also Read : மகளிர் டி20 உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு..!!

இந்நிலையில் அந்த மூதாட்டி வைத்திருந்தது கல் இல்லை அரியவகை பிசின் கட்டி என்பது தெரியவந்துள்ளது. இது ஒரு அறியவகையான பிசின் என்பதை தெரியாமல் பல வருடங்களாக அது கல்லாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், மூதாட்டின் மறைவுக்குப் பிறகு அவரின் உறவினர் ஒருவர் அதனை கண்டறிந்து விற்றுள்ளார்.

இந்த அரியவகை பிசின் கட்டி இந்திய மதிப்பில் சுமார் 8.4 கோடிக்கு விலைபோயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Spread the love
Exit mobile version