அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோ ஆர்ட் மியூசியமில் சோமஸ்கந்தரின் பழங்கால உலோக சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான தொன்மை வாய்ந்த சோமஸ்கந்தர் உலோக சிலை, அமெரிக்காவின் ஆர்ட் மியூசியத்தில் இருப்பதை தமிழ்நாடு காவல்துறையின் சிலைத் திருட்டு தடுப்பு பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
Also Read : ரஜினிகாந்த் 2 நாட்களில் வீடு திரும்புவார் – அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்..!!
இணையதள தேடலில் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஏசியன் ஆர்ட் மியூசியமில் இந்த சிலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதன் மதிப்பு ₹8 கோடி இருக்கும் என தகவல்
இச்சிலையின் காலம் கி.பி. 1500 முதல் கி.பி. 1600க்குள் இருக்கலாம் எனவும், தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த வெங்கட்ராமநாயனி என்பவரால் கோயிலுக்கு கொடுக்கப்பட்டது என்று ஆவணப்படுத்தப்பட்டுள்ளது
சிலையை இந்தியாவுக்கு கொண்டுவரவும், சிலையை அமெரிக்காவுக்கு கடத்திய நபர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.