Site icon ITamilTv

நெட்பிளிக்ஸில் வெளியானது Animal Movie

Animal Movie

Animal Movie

Spread the love

ரன்பீர் கபூர் , ராஷ்மிகா மந்தனா நடிப்பில் திரையரங்குளில் பிரமாண்டமாக வெளியான Animal Movie இன்று நெட்பிளிக்ஸில் OTT தளத்தில் வெளியாகி உள்ளது.

அர்ஜூன் ரெட்டி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்காவின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி உள்ள திரைப்படம் அனிமல்.

ரன்பீர் கபூர் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் .

இந்த இரு பெரும் நட்சத்திரங்களுடன் சேர்ந்து அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .

க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை டி சீரிஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது .

கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான இப்படம் வட இந்தியாவில் அமோக வரவேற்பை பெற்று இளசுகளால் கொண்டாடப்பட்டது.

ஆனால் அப்படியே இந்த பக்கம் அதாவது தமிழகத்தில் இந்த படம் எதிர்பாராத அளவுக்கு சரியாக ஓடவில்லை என்பது மறுக்கவும் மறைக்கவும் முடியாத உண்மை .

ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களின் மிக எதிர்பார்ப்பை இப்பட பூர்த்தி செய்ததா என்று கேட்டால் அதற்கு கேள்விக்குறியே பதில் .

விமர்சன ரீதியாக இப்படம் தோற்றாலும் வசூலில் பட்டய கிளப்பியாக திரை துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ஷாருக்கானின் பதான், ஜவான் படங்கள் வரிசையில் ரன்பீர் கபூரின் Animal Movie 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்தது.

Also Read : https://itamiltv.com/ilayarajas-daughter-bhavatharini-died-due-to-ill-health/

அப்பா அனில் கபூரின் மீது அதீத அன்பு கொண்ட ரன்பீர் கபூர், சைக்கோத்தனமாக மாறுவதே அனிமல் படத்தின் கதை.

இதனால் படம் முழுவதும் ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறை காட்சிகள் இருந்தன. இது அனிமல் படத்துக்கு நெகட்டிவாகும் என எதிர்பார்த்தால், அதனை கடந்து பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேநேரம் அனிமல் மீது சில நெகட்டிவ் விமர்சனங்களும் வந்தன.

இந்நிலையில் இப்படம் இன்று பிரபல OTT தளமான நெட்பிளிக்ஸில் OTT யில் வெளியாகி உள்ளது. படத்தை பார்க்காதவர்கள் இப்போ பார்த்துவிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க


Spread the love
Exit mobile version