அண்ணா பல்கலை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் தற்போது இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என அதிமுக பொது செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது :
அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது . அத்துமீறலை செல்போனில் படம்பிடித்ததாகவும் மாணவி புகார் அளித்துள்ளார் .
குற்ற சத்திர பதிவேடு குற்றவாளியை அண்ணா பல்கலை.க்குள் எவ்வாறு அனுமதித்தார்கள்? ஞானசேகரன் மீது 20 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞானசேகரன் ஏற்கனவே பாலியல் குற்ற வழக்கில் எவ்வாறு விடுவிக்கப்பட்டார்? பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்.
Also Read : அண்ணாமலை ‘சர்க்கஸ்’ – திருநாவுக்கரசர் சாடல்..!!
சமீபத்தில், சென்னை மாநகரத்தை சுற்றி பல்வேறு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. காவல் ஆணையரும், உயர்கல்வித்துறை அமைச்சரும் கூறும் கருத்துகள் முரண்படுகின்றன.
அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை; பாதுகாப்பு குறித்து பெற்றோர் அச்சம் கொண்டுள்ளனர்.
பல்கலைக் கழகத்தில் உள்ள 70 சிசிடிவி-க்களில் 56 மட்டுமே செயல்படுகின்றன . கைதான ஞானசேகரனை இத்தனை நாள் சுதந்திரமாக நடமாடவிட்டதற்கு காவல்துறையே முழுப் பொறுப்பு என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.