ITamilTv

Anna University-ஆளுநர் நிகழ்ச்சிக்கு வந்தால் தான்.. சுற்றறிக்கையால் சர்ச்சை!

Anna University

Spread the love

Anna University-தமிழக ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு வந்தால் தான் வருகைப்பதிவு செய்யப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையால் சர்ச்சையை ஏற்ப்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் சுபாஷ் சந்திர போஸின் 127ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் விழாவை பராக்கிரம திவாஸ்’ அதாவது தேசிய வல்லமை தினமாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது.

அந்த வகையில்,சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள உள்ளார்.

இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் நிகழ்ச்சிக்கு வந்தால்தான் மாணவர்களுக்கு வருகைப்பதிவு என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :http://Jayalalithaa-”தமிழக அரசிடம் ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைங்க..”நீதிமன்றம் அதிரடி!

அதில், ஆளுநர் நிகழ்ச்சியில் பங்கேற்க 3 மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன்,

நிகழ்ச்சியின் போது வருகைப்பதிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேதாஜியின் பிறந்தநாள் விழாவில் ஆளுநர் இன்று பங்கேற்கவுள்ள நிலையில் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு அண்மைக்காலமாக நிலவி வருகிறது.

முன்னதாக நேற்று சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்ட ராமர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

அப்போது கோவிலில் பூசாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒருவித அச்ச உணர்வுடன் இருந்ததாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1749688386716311778?s=20

இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,’கோதண்டராமர் கோயிலில் அடக்குமுறை எதுவுமில்லை’ என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டுக்கு கோயிலின் பட்டாச்சாரியார் மோகன் உடனடியாக மறுப்பு தெரிவித்தார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கில்,

பாஜகவில் பல நிலைகளில் பொறுப்பு வகிப்பவர்களும் செயல்படுகிறார்கள் என பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்

இந்த நிலையில்,தமிழக ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு வந்தால் தான் வருகைப்பதிவு செய்யப்படும் என

அண்ணா பல்கலைக்கழகம்(anna university) அனுப்பியுள்ள சுற்றறிக்கையால் சர்ச்சையை ஏற்ப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Spread the love
Exit mobile version