அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன், குற்றம் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் அவரின் பின்னணி குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் சாலையோரம் பிரியாணி வியாபாரம் செய்து வந்த ஞானசேகரன் இரவில் பிரியாணி விற்பனையை முடித்துவிட்டு, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்று அங்கு பேசிக் கொண்டிருக்கும் காதலர்களை வீடியோ பதிவு செய்து, போலீஸ் எனக்கூறி மிரட்டி, மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தற்போது கைதான ஞானசேகரன், சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Also Read : நள்ளிரவில் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்..!!
தண்டனை காலம் முடிந்து வெளியில் வந்தும் திருந்தால் இருந்த ஞானேசகரன் மீது 15-க்கும் மேற்பட்ட திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணை வளையத்தில் இருக்கும் ஞானசேகரனின் செல்போனில் இருந்து பல வீடியோக்களை காவல்துறை கைப்பற்றி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.