சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காதலன் கண்முன்னே காதலிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில் நேற்றிரவு, 2ம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தாக்குதல் நடந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்ததை அடுத்து கோட்டூர்புரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்றிரவு, உணவு அருந்திய பிறகு தான் காதலிக்கும் 4ம் ஆண்டு மாணவன் உடன் மறைவான இடத்தில் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த இருவர், மாணவனை அடித்து விரட்டிவிட்டு தன்னை பாலியல் தாக்குதல் செய்ததாக 2 ஆம் ஆண்டு மாணவி புகாரளித்துள்ளார்.
மாணவியை தாக்கியவர்கள் பல்கலை. மாணவர்களா? அல்லது வெளியில் இருந்து வந்தவர்களா? என்பது குறித்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் பெண் காவல் அதிகாரிகள் புகாரளித்த மாணவியிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்படுவதுடன், சைபர் கிரைம் உதவியுடன் நேற்றிரவு அப்பகுதியில் இருந்த செல்போன் சிக்னல்களையும் போலீசார் ஆய்வு செய்கின்றனர்
பல்கலை. வளாகத்தில் இரவு நேரத்தில் காவல் பணியில் இருந்த காவலாளிகளிடமும் தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.