தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளுக்கு ஷாக் கொடுக்கும் வகையிகள் அண்ணா பல்கலை கழக சிண்டிகேட் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளில், மாணவர்களின் கல்வித்தரத்தை ஆய்வு செய்ய அனைத்து செமஸ்டர்களிலும் ஒரு பாடத்திற்கு பல்கலைக்கழகமே வினாத்தாள் தயாரித்து, தேர்வு நடத்தி, வினாத்தாள் திருத்தம் செய்து மதிப்பெண்கள் வழங்க அண்ணா பல்கலை. சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Also Read : மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் மீது நடிகை நமீதா பரபரப்பு குற்றச்சாட்டு..!!
தமிழ்நாட்டில் 116 பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி அந்தஸ்தில் இயங்குகின்றன. இக்கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. பாடத்திட்டம் வழங்கினாலும் சொந்தமாகவே வினாத்தாள் தயாரித்து, தேர்வுகளை இக்கல்லூரிகளே நடத்துகின்றன.
இந்நிலையில் தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு எந்த வித அலட்சியமும் காட்டாமல் குறுக்கு வழியில் தேர்ச்சி பெற வைக்காமல் இருக்க அண்ணா பல்கலை. சிண்டிகேட் இந்த புதிய முடிவை எடுத்துள்ளது.
அண்ணா பல்கலை கழக சிண்டிகேட் எடுத்துள்ள இந்த புதிய முடிவுகு பலர் ஆதரவுகளை சில மாற்று கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.