பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு டிசம்பர் 8 முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், இதற்காக கல்லூரிகளை ஒதுக்கீடு செய்யுமாறு, கல்லூரி நிர்வாகங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கடிதம் எழுதியுள்ளது.
ஆசிரியர்கள் பணியாளர் தேர்வு வாரியம் 2017-2018 ஆம் ஆண்டிற்க்காண அரசு பாலிடெக்னிக் கல்லூரி 1,060 விரிவுரையாளருக்கான தேர்வு கடந்த மாதம் 28, 29, 30 மற்றும் 31 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தேர்வுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு பல கிலோமீட்டருக்கு அப்பால் தேர்வு மையங்களை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, அக்டோபர் நடைபெறவிருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு, தேர்வர்களுக்கு தங்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே தேர்வு எழுதும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த வாரம் அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான கணினி வழி போட்டித் தேர்விற்கான கால அட்டவணை டிசம்பர் மாதம் 08ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
மேலும் இத்தேர்விற்கான தேர்வர்களுக்குரிய அனுமதி சீட்டு தேர்விற்கு முந்தைய வாரத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் டிசம்பர் 8 முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு, பொறியியல் கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பணியாளர் தேர்வு வாரியத்திற்கு தேர்வு மையம் அமைக்க பொறியியல் கல்லூரிகளை ஒதுக்கீடு செய்யுமாறு, கல்லூரி நிர்வாகங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கடிதம் எழுதி உள்ளது.