அண்ணா பல்கலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசைக் கண்டித்து தன்னைத் தானே சாட்டையால் அடிக்கும் போராட்டத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று நிகழ்த்தினார்.
திமுக அரசை கண்டித்து சாட்டை அடி போராட்டம் திமுக ஆட்சி கவிழும் வரும் காலனி அணியாமல் இருப்பேன் என அண்ணாமலை சபதம் எடுத்துள்ள நிலையில் தற்போது இதற்கு பலரும் கடுமையான பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது அண்ணாமலையின் இந்த சபதம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் அளித்துள்ள பேட்டியில் கூறிருப்பதாவது :
அண்ணாமலை அரசியல் படிப்பதற்காக லண்டன் சென்றார் என கேள்விப்பட்டேன். இப்போதுதான் தெரிகிறது அண்ணாமலை ‘சர்க்கஸ்’ படிக்க லண்டன் சென்று வந்துள்ளார் . சர்க்கஸில் தான் கோமாளிகள் சாட்டையடித்து மக்களை மகிழ்விப்பர்.
Also Read : இரும்பு தடுப்பில் பாய்ந்த மின்சாரம் – இரு இளைஞர்கள் பலி..!!
ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ஊர்வலம் என அரசியல் போராட்டங்களுக்கு எவ்வளவோ வடிவங்கள் உள்ளது. ஆனால், அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் சர்க்கஸ் கோமாளிபோல் ஆகிவிட்டது.
கிண்டல், கேலியாக மக்கள் பார்க்கின்றனர். நேற்று தொலைக்காட்சிக்கு முன் இரண்டு செருப்பையும் அரைமணிநேரம் எடுத்துக் காட்டி கொண்டிருக்கின்றார். மக்களுக்கு செருப்பு அணிய மாட்டேன் என்று சொன்னால் புரியாதா?
ஐபிஎஸ் படித்த மனிதர் தரமான அரசியலை முன்னெடுக்க வேண்டும். கோமாளி அரசியலை முன்னெடுக்க கூடாது என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.