Site icon ITamilTv

INDIA Alliance-”சீட்டுக்கட்டில் உள்ள ஜோக்கர் போல் ஒரு ஒரு கட்சி..”-அண்ணாமலை!!

INDIA Alliance

INDIA Alliance

Spread the love

INDIA Alliance-INDIA கூட்டணி ஒரு சீட்டுக்கட்டு போல்.. ஒவ்வொரு முறை குலுக்கும் பொழுதும் ஜோக்கர் போல் ஒரு ஒரு கட்சியும் வெளியேறுவதாக அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்

பிரதமர் நரேந்திரமோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை தமிழ்நாடு முழுவதும் எடுத்துச்செல்லும் நோக்கிலும்,

தமிழர்களின் எழுச்சிக்காகவும், ஊழலை அறவே ஒழிக்க வேண்டுமென்பதற்காக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் நடைப்பயணத்தை தொடங்கினார்.

இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.

அதன்படி இன்று 81 வது நாளாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி படைவீட்டமன் ஆலயம் அருகே என் மண்..என் மக்கள் பயணத்தை அண்ணாமலை தொடங்கினார்.

இதையும் படிங்க :http://padma bhushan award-அன்புமணி நெகிழ்ச்சி வாழ்த்து..!

யாத்திரை தொடங்கும் முன்னதாக குடியரசு தினத்தையொட்டி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.அப்போது அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பாரதமாதா சிலை உள்ளிட்டவற்றை பரிசாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை,
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு இரண்டு பத்ம விபூஷன் அளிக்கப்பட்டுள்ளது

பத்மபூஷன் விருது கேப்டன் விஜயகாந்துக்கு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து வள்ளலாரின் கொள்கை சகிப்புத்தன்மை வடலூரில் போலீசாரின் தடியடி நடத்தப்பட்டது ஏற்க முடியாது ஒன்று என்றார்.

இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1750842710981050555?s=20

மேலும் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை,

பாதிக்கப்பட்ட செய்தியாளரை களங்கப்படுத்தக் கூடாது, உண்மை செய்திகள் வெளியிடுபவர்கள் தாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது,

கண்டனத்திற்குரியது பாதிக்கப்பட்டவரை கலங்கப்படுத்தும் முயற்சியில் மாநில அரசும், காவல்துறையும் இறங்கி உள்ளது என்றார்.

இந்திய கூட்டணி (INDIA Alliance) ஒரு சீட்டுக்கட்டு போல் ஒவ்வொரு முறை குலுக்கும் பொழுதும் ஜோக்கர் போல் ஒரு ஒரு கட்சி வெளியேறுகிறது.

மக்கள் மன நிலைக்கு எதிர்ப்பாக பிரதமர் மோடியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சேர்ந்தால் இந்த நிலை தான் ஏற்படும் அண்ணாமலை என்றார்.


Spread the love
Exit mobile version