திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வினோத சபதம் எடுத்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது :
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் திமுக அரசைக் கண்டித்து டிசம்பர் 27ஆம் தேதியன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
FIR- லீக்கானது எப்படி..? கட்சி பொறுப்பில் இருப்பதால் மரியாதையாக பேசுறேன்.. FIR-ஐ படிக்கும் போது ரத்தம் கொதிக்கிறது.. அந்த குடும்பத்தையே நாசம் செய்துட்டீங்க என தெரிவித்துள்ளார்.
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. நிகழ்ச்சிகளில் ஞானசேகரன் பங்கேற்றதன் புகைப்படங்களை வெளியிட்ட அண்ணாமலை தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பாக இல்லை; கைது செய்யப்பட்ட பாலியல் குற்றவாளி தி.மு.க.வில் இருந்தவன் தான்; குற்றச்செயல்களை மறைக்க அமைச்சர்களுடன் இணைந்து ஞானசேகரன் புகைப்படம் எடுத்துள்ளான்.
நாளை காலை 10 மணிக்கு தனக்குத் தானே சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை தான் செருப்பு அணியப் போவதில்லை என்றும் சூளுரைத்துள்ளார்.