அண்ணா பல்கலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசைக் கண்டித்து தன்னைத் தானே சாட்டையால் அடிக்கும் போராட்டத்தில் அண்ணாமலை இன்று ஈடுபட்டுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் திமுக அரசைக் கண்டித்து டிசம்பர் 27ஆம் தேதியன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில் சொன்னது சொன்னபடி இன்று கோவையில் உள்ள அவரது இல்லத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 6 முறை தன்னைத்தானே சாட்டையால் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
Also Read : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்..!!
வெற்றிவேல் வீரவேல் என சுற்றி இருந்தவர்கள் கோஷம் எழுப்ப சில அடிகளுக்குப் பிறகு அவர்கள் அண்ணாமலையை தடுத்து நிறுத்தினர்.
இதுமட்டுமின்றி திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்றும் தெரிவித்துள்ள அண்ணாமலை நேற்றே தனது காலனியை அகற்றி தனது அன்றாட வேலைகளை செய்து வருகிறார்.