Site icon itamiltv.com

பாஜக தலைமையுடன் முரண்பாடு?தேர்தலுக்கு பிறகுஅண்ணாமலை அதிரடி முடிவு – ஆடியோ லீக்!

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு மிகக் குறைந்த நாட்களே மீதமுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்யும் காலக்கெடும் நிறைவடைய வருகிறது.

இதனால் பல அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் பாஜகக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தாமதமாகியுள்ளது.

இந்த தாமதத்திற்கு மாநில அரசியலில் முக்கியப் பாத்திரமாக உள்ள அண்ணாமலை காரணம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அவர் கோவை வடக்கு உள்ளிட்ட சில தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிக ஆதரவு கிடைத்த கோவை வடக்கு தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், அந்த தொகுதிக்கான உள்ளக போட்டி மற்றும் கூட்டணி அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மேலும், தனது ஆதரவாளர்களுக்கும் விரும்பிய தொகுதிகள் வழங்கப்படவில்லை என்பதால் அண்ணாமலை அதிருப்தியில் உள்ளார் என கூறப்படுகிறது.

இதன் காரணமாக, தேர்தல் முடிந்த பிறகு தனது அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தலாம் என அவர் நெருக்கமானவர்களிடம் பகிர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், தேர்தல் பணிகளை முழுமையாக நிறைவு செய்த பிறகே எந்த முடிவும் எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், அண்ணாமலையின் அடுத்த கட்ட முடிவு குறித்து அரசியல் வட்டாரங்களில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

Exit mobile version