கரூரில் பாலியல் வன்கொடுமையால் 12ம் மாணவி ஒருவர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீக காலமாக பாலியல் தொல்லை காரணமாக சிறுமிகளின் தற்கொலை மரணங்கள் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் சீண்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு காலணி பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் மாணவி வெளியில் வராததை அடுத்து பக்கத்து வீட்டு பாட்டி வீட்டினுள் சென்று பார்த்துள்ளார். அப்போது மாணவி தூக்கில் தொங்கியவாறு இருந்ததை அடுத்து மாணவியின் தாயிக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவியின் தாய் வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனை அடுத்து விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.அதன் போது மாணவி எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அந்தக் கடிதத்தில் பாலியல் சீண்டலால் சாகுர கடைசி பொண்ணு நானாக தான் இருக்கனும் என்றும், என்ன யார் இந்த முடிவு எடுக்க வெச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு. இந்த பூமியில் வாழரத்துக்கு ஆசைப்பட்டேன். ஆனா, இப்போ பாதியிலேயே போறேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ கிடைச்சா நல்லா இருக்கும் என உருக்கமாக எழுதி இருந்தது கண்கலங்க வைத்துள்ளது. இந்த கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை ஒன்றே தீர்வாகாது. எதையும் எதிர்த்துப் போராடும் மன தைரியத்தை பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்!